ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் ,விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினரை வாழ்த்தி படம் குறித்து பதிவிட்டுள்ளார். "விக்ரம் திரைப்படம் அருமையாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. இந்தப் படத்தைக் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பஹத் மற்றும் மொத்த படக்குழுவினருக்கு நன்றி. நிச்சயம் பிளாக்பஸ்டர்!" என்று தெரிவித்துள்ளார்.