பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்க நாளை வெளியாக உள்ள படம் 'விக்ரம்'.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகரான பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தனது படத்தில் நல்ல திறமையான நடிகர்கள் வேண்டும் என்று நினைத்து அவர்களை அழைத்து தன் படத்தில் நடிக்க வைத்தார் கமல்ஹாசன். ஆனால், அவர்களை படத்தின் எந்த ஒரு பிரமோஷனுக்கும் அழைத்துச் செல்லவில்லை என்பது கசப்பான உண்மை.
சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் மட்டும் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். பகத் பாசில் அதில் கூட கலந்து கொள்ளவில்லை. சென்னை, டில்லி, மும்பை, கொச்சி, ஹைதராபாத், மலேசியா, துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கமல்ஹாசனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.
கமல்ஹாசனுடன் நடித்ததும், விக்ரம் படத்தில் இடம் பெற்றதும் தங்களது பெருமை என சொல்லிக் கொள்ளும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் தாங்கள் படத்தின் பிரமோஷன்களில் புறக்கணிக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஒரு வேளை பத்து வருடங்கள் கழித்து அவர்கள் இது குறித்து வாயைத் திறக்கலாம்.