3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்று 1200 கோடி வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 120 கோடி வசூலைக் கடந்து தற்போது 6வது வாரத்தில் நுழைந்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து மொழிகளிலும் 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு வெளிவந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதன் பின் வந்த சில முக்கிய படங்கள் ஓரிரு வாரங்களில் தியேட்டரை விட்டே போய்விட்டது. ஆனாலும், தமிழகத்தில் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, வட இந்திய மாநிலங்கள் என அனைத்து இடங்களிலுமே 6வது வாரத்தில் ஓடுவதை திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
இப்படி ஒரு வரவேற்பும், வசூலும் மீண்டும் எந்த ஒரு படத்திற்காவது கிடைக்குமா என்பது சந்தேகம் என்றே சொல்கிறார்கள். ராஜமவுலி, பிரபாஸ் என தெலுங்குத் திரையுலகின் பிரபலங்கள் இணைந்த 'பாகுபலி 2' படம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது பெரிய விஷயமல்ல. ஆனால், ஒரு கன்னட சினிமா, அதிக பிரபலமில்லாத இயக்குனர், முன்னணியில் இல்லாத ஒரு ஹீரோ நடித்த ஒரு படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை செய்ததுதான் மிகப் பெரிய விஷயம் என இந்தியத் திரையுலகமே வியக்கிறது.