துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியதுடன் ஒவ்வொரு படியாக ஏறி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதன் அடுத்த கட்டமாக தற்போது கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தனது அபிமான நடிகரின் படத்தை இயக்குவது ஒரு ஆச்சரியம் என்றால், இந்த படத்திற்கு விக்ரம் என கமல் ஏற்கனவே நடித்த அவரது படத்தின் பெயரையே வைத்தது குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்தார்கள். அதேசமயம் இந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜூக்கும் மிகநெருங்கிய இன்னொரு ஆச்சரியமான தொடர்பு உள்ளது. கமல் நடித்த விக்ரம் படம் வெளியான 1986-ம் வருடத்தில் தான் லோகேஷ் கனகராஜ் பிறந்தார். சொல்லப்போனால் அவரது வயது தான் இந்த விக்ரம் படம் என்று கூட சொல்லலாம்.
விக்ரம் வெளியான சமயத்தில் பிறந்து, பின்னாளில் கமல் ரசிகராக மாறி, இயகுனரானதும் அவரது படத்தையே இயக்கியுள்ளது நிச்சயமாக ஒரு சாதனை தான். விக்ரம் வெளியான வருடத்தில் பிறந்தவர் என்பதால் கூட இந்த படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதோடு இந்த விக்ரம் படம் ஏற்கனவே வெளியான விக்ரம் படத்தின் மற்றொரு வடிவம், இன்னும் சொல்லப்போனால் விக்ரம் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம் என்கிறார்கள்.