சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2019ல் வெளியான படம் ‛கைதி'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. முன்னணி நாயகனின் படத்தில் நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம் 'கைதி' என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 'கைதி' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு மற்றொரு மைல்கல்லாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் கைதி படம் வெளியாகிறது. 'உஸ்னிக்' என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். 'உஸ்னிக்' படத்தினை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.