64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் விக்ரம். அவருடன் விஜயசேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கும் நிலையில் கமலின் மன்மதன் அன்பு படத்திற்கு பிறகு இந்த படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் சூர்யா. இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யா இரண்டு நாட்கள் நடித்த கொடுத்ததாகவும், அவர் நடித்த காட்சிகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே விக்ரம் படப்பிடிப்பு சமயத்தில் கேரவன் மாதிரியான இடத்தில் சூர்யாவுடன் இயக்குனர் லோகேஷ் உள்ளிட்ட அவரது குழுவினர் குரூப் போட்டோ எடுத்துள்ளனர். அந்த போட்டோவை இப்போது பகிர்ந்து சூர்யாவை விக்ரம் குழுவில் வரவேற்பதாக லோகேஷ் பதிவிட்டுள்ளார்.
விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் இந்த படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.