இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் புலனாய்வு அதிகாரியாக நடித்திருப்பதாகவும், ஒரு நகரத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை அவர் விசாரிக்கும்போது அதன் பின்னணியில் ஒரு மாபியா கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கமல். அதையடுத்து அந்த கும்பலை அவர் எப்படி அழிக்கிறார் என்பதுதான் விக்ரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அதோடு, கமல்ஹாசன் அமர் என்ற ரோலில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்படி என்றால் விக்ரம் வேடத்தில் நடித்திருப்பது யார்? என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.