காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் |
இந்திய அளவில் ரூ.100 கோடி வசூலித்த படங்கள்தான் அதிகம். ஆனால், 500 கோடி வசூலைக் கடந்த படங்கள் ஒரு சில மட்டும்தான். 100 ஆண்டு கால இந்தியத் திரையுலக வரலாற்றில் இதுவரையிலும் 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், 2.0, பாகுபலி, டங்கல்' ஆகிய படங்கள் மட்டுமே ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவற்றில் 'பாகுபலி 2, கேஜிஎப் 2' படங்கள் ரூ.1000 கோடி வசூலைக் கடந்துள்ளன.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடித்து 2018ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் ரூ.1050 கோடி ரூபாயையும், வெளிநாடுகளில் 350 கோடி ரூபாயையும் வசூலித்து 1400 கோடியை மொத்தமாக வசூலித்திருந்தது.
இந்திய அளவில் 500 கோடியைக் கடந்து 1000 கோடியையும் தாண்டியுள்ள இரண்டாவது படமாக 'கேஜிஎப் 2' படம் இடம் பிடித்துள்ளது. இப்படம் இந்தியாவில் 1000 கோடி வசூலையும் வெளிநாடுகளில் 200 கோடி வசூலையும் பெற்றுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் இந்திய வசூல் சாதனையான 1050 கோடியை முறியடிக்க இன்னும் 50 கோடிதான் தேவை. அதையும் இப்படம் முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.