இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
டெடி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஆர்யா, இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛கேப்டன்'. ஐஸ்வர்ய லட்சுமி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டின் பிரடேட்டர் பட பாணியில் இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. காரணம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அது மாதிரி தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தொடர்ச்சியாக இந்நிறுவனம் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வரிசையில் இப்போது கேப்டனும் உதயநிதி வசமாகி உள்ளது. அதோடு இந்த படம் வருகிற செப்., 8ல் திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.