நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? |
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். இவருக்கும் மோனிகா என்பவருக்கும் 2008ம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2020ம் ஆண்டு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
அதன்பிறகு இமான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதை நிரூபிக்கும் வகையில் இன்று இமான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கலை இயக்குனர் உபால்டுவின் மகள் அமலியை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் செய்தார். இரு வீட்டாரது சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.