லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். மேலும் புஷ்பா படத்தை தொடர்ந்து ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை, அனிமல் போன்ற படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்தபடியாக பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராதே ஷ்யாம் படத்தை அடுத்து ஆதிபுருஷ், சலார், பிராஜக்ட் கே போன்ற படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறாராம் ராஷ்மிகா மந்தனா.