நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அரசியலில் தொடர் தோல்விகளை சந்தித்த கமல்ஹாசன் தற்போது சினிமாவில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அவர் நடித்து வரும் விக்ரம் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரம் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளார்.
அந்த பாடலில் "கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கமல்ஹாசன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' என்ற பாடல் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் சாதிய ரீதியான பிரச்னைகளை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. எனவே விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும். மேலும், மத்திய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்ட கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.