பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
தனுசுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷின் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றி உள்ளது.. படத்தை வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.