'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் சாய் பல்லவி. அவருக்குத் தமிழில் இன்னும் சரியான படங்கள் அமையவில்லை.
தற்போது அவர் தமிழ், கன்னடம், தெலுங்கில் தயாராகியுள்ள 'கார்கி' என்ற படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்று மொழிகளிலுமே சாய் பல்லவியே தனது சொந்தக் குரலில் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். அதையும் முன்னோட்ட வீடியோவில் காட்டியுள்ளார்கள்.
கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு நிவின் பாலி நடித்த 'ரிச்சி' படத்தை இயக்கியவர். சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள 'விராட பர்வம்' படத்தில் அவரது கதாபாத்திர அறிமுக வீடியோவும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் ஜுலை 1ம் தேதி வெளியாக உள்ளது.