நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு |
டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில், ஷங்கர் இஷான் லாய் இசையமைப்பில், அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிருத்விராஜ்'. ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த '2.0' படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நாயகன் அக்ஷய்குமாரை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் இந்தப் படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
1179ம் ஆண்டில் டில்லிக்கு அரசனாக தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்தவர் பிருத்விராஜ் சவுகான். முஸ்லிம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இராசபுத்திரர்களை ஒன்றிணைத்து அவர்களை எதிர்த்து போரிட்ட மாவீரன் பிருத்விராஜ். முஸ்லிம் மன்னர்களை எதிர்த்துப் போரிட்ட கடைசி இந்து மன்னன் இவரே. ஆப்கானிய மன்னனான கோரி முகம்மதுவை 1191ம் ஆண்டு நடந்த போரில் தோற்கடித்தார். இருப்பினும் அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற போரில் பிருத்விராஜ் தோற்றதால் தில்லி, முஸ்லிம் மன்னர்களின் வசமானது. பிருத்விராஜ் மீது காதல் கொண்ட கன்னோசி நாட்டு இளவரசி சம்யுக்தாவின் காதல் வட இந்தியாவில் புகழ் பெற்ற காதல் கதையாகும்.
இப்படத்தில் பிருத்விராஜ் ஆக அக்ஷய்குமார், முக்கிய வேடத்தில் சஞ்சய் தத், கோரி முகம்மது கதாபாத்திரத்தில் மன்னவ் விஜ், சம்யுக்தா கதாபாத்திரத்தில் மனுஷி சில்லர், பிருத்விராஜின் அரசவைப் புலவரும், நண்பருமான சந்த் பார்தாய் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளனர்.
காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் இப்படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியாகி உள்ளது. ஜுன் 3ம் தேதி வெளியாகிறது.