பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் அழகி சம்யுக்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றார். சில மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் சந்திரகுமாரி தொடரில் நடித்தார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள வெப் தொடர் குத்துக்கு பத்து. 'டெம்பிள் மங்கீஸ்' என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் தொடர் இது. விஜய் வரதராஜ் இயக்கி உள்ள இந்த தொடரில் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். டி கம்பெனி சார்பில் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.
தொடர் குறித்து அதன் இயக்குனர் விஜய் வரதராஜ் கூறியதாவது: காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றார்.
இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் குத்துக்கு பத்து, நோ பேச்சு, ஒன்லி பஞ்ச் என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த தொடர் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.