ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை பெற்றுள்ளது.
ஹிந்தியில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம், கன்னடத்தில் ரூ.160 கோடி, தெலுங்கில் ரூ.130 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்திலும் ரூ.100 கோடி வசூலைக் கடக்க உள்ளது. ஒரு திரைப்படம் வெளியான ஐந்து மொழிகளில் நான்கு மொழிகளில் 100 கோடி வசூலித்திருப்பது பெரிய விஷயம். வெளிநாடுகளிலும் இப்படம் 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழிகத்தில் 100 கோடி வசூலிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கன்னடப் படத்தை இப்படி ஓட வைக்க வேண்டுமா என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும் மக்கள் விரும்பும் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் என்று இங்குள்ளவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.