Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?

26 ஏப், 2022 - 03:15 IST
எழுத்தின் அளவு:
Karthi-film-directed-by-Arun-Raja-Kamaraj

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படமும் , பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்திற்கு வற்புறுத்தி பெண்ணை மிரட்டிய நடிகர்திருமணத்திற்கு வற்புறுத்தி பெண்ணை ... நம் இயக்குனர்களிடம் சிந்தனை இல்லை: இளையராஜா நம் இயக்குனர்களிடம் சிந்தனை இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)