'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
மார்வல் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தோர். அவருக்கும், அவரது ராட்சத சுத்தியலுக்கும் பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவென்ஜர் எண்ட் கேமோடு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் மார்வெல் நிறுவனம் முடிவுகட்டிவிட்டது என்று கருதிக் கொண்டிருக்கும்போது சூப்பர் ஹீரோக்கள் தற்போது வேறு பரிமாணங்களில் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தோர் இப்போது 'லவ் அண்ட் தண்டர்' என்ற தலைப்போடு வருகிறார். இந்த முறை அவர் தனது போராட்ட வழியை மாற்றி தனது சுத்தியலை அன்பின் ஆயுதமாக்கி ஆன்மீக வழியில் அமைதி, தேடி காதலில் விழுகிறார். ஆனாலும் தீய சக்திகள் விடுமா அவரை சீண்டிப் பார்க்கிறது. மீண்டும் தோரின் அடிதடி ஆரம்பமாகிறது. இதுதான் இந்த படத்தின் கதை சுருக்கம். தோராக வழக்கம்போல் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்திருக்கிறார். காதலியாக டெஸ்ஸா தாம்சன் நடித்திருக்கிறார்.
'தோர்: ரக்னாரோக்' படத்தினை இயக்கிய, டைகா வெயிட்டிடி இதனை இயக்கி உள்ளார். வருகிற ஜூலை 8ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது