ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கன்னடத்தில் இயக்கிய படம் ரணதந்திரா. தற்போது அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் இயக்கிய ரணதந்திராவை மாஸ்க் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம் கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி ஆதிராஜன் கூறியதாவது: சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் இருக்கும். த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும். என்றார்.