ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் இப்படி நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு ரசிகர்கள் 'கேஜிஎப் 2' படம் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் 300க்கும் குறைவான தியேட்டர்களில்தான் வெளியானது இந்தப் படம். ஆனால், தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல தியேட்டர்கள் காலை 8 மணி 9 மணி சிறப்புக் காட்சிகளை வைத்துள்ளார்கள். படம் வெளியாகி நாளை 11வது நாளிலும் அந்தக் காட்சிகள் பெரும்பான்மையான அளவிற்கு ஹவுஸ் புல் ஆகி தியேட்டர்காரர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளதாம்.
இப்படத்திற்கு ஒரு நாள் முன்னதாக வெளியான 'பீஸ்ட்' படம் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள். 'கேஜிஎப் 2' படம் மாநகரத் தியேட்டர்களில் மட்டுமல்லாது சிறிய ஊர்களில் வெளியான தியேட்டர்களில் கூட நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




