ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா. தயாரிப்பாளர், கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ராதிகா.
லண்டன் சென்றுள்ள ராதிகாவுக்கு லண்டன் பார்லிமென்ட்டில் நடந்த விழாவில் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து பார்லிமென்ட் உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். விருது வழங்கும் விழாவில் பேசிய ராதிகா “இங்கிலாந்து பார்லிமென்ட்டில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி. என்றார்.