ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. வெளியான நாளிலிருந்தே வசூலில் சாதனை படைத்து வந்தது இப்படம்.
இன்றுடன் ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தமிழகத்தில் கூட இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான். மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் மற்ற ஊர்களில் சில தியேட்டர்களிலும் இப்படம் இன்னமும் சில காட்சிகளில் 90 சதவீத அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் மட்டுமே 300 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளது இப்படம். தெலுங்கு மாநிலங்களில் 400 கோடி வசூலையும் கடந்துள்ளது. உலக அளவில் 1100 கோடி வசூலைக் கடந்துள்ளது. வெளிநாடுகளில் 200 கோடி வசூலையும், தமிழகத்தில் 50 கோடி வசூலையும் தாண்டியுள்ளது. 'பாகுபலி 2' அளவிற்கு வசூல் இல்லை என்றாலும் 'ஆர்ஆர்ஆர்' படமும் நல்ல லாபத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
'கேஜிஎப் 2' படம் போட்டிக்கு வந்தாலும் அதையும் சமாளித்து ஓடிக் கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள்.