'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? | மாரீசன் படத்தை பேசாத வடிவேலு, பஹத் | “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் | “உங்களுக்கு செம தைரியம் தான்” : மோகன்லாலுக்கு குஷ்பூ பாராட்டு | ரீமேக் படங்கள்தான் கட்சியை நடத்த உதவியது: பவன் கல்யாண் | பஹத் பாசிலை விட சிறந்த சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள் : வைரலாகும் மோகன்லால் பதில் | ஹன்சிகாவுடன் பிரிவா ? அவரது கணவர் பதில்… | ரயிலில் விழப்போன மஞ்சு வாரியர் : காப்பாற்றிய மனோஜ் கே.ஜெயன் | பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா |
இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, ரித்விகா, அருண் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ள 'ஆதார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது பேசிய நடிகர் அருண் பாண்டியன் பேசியதாவது : தற்போது எல்லா மொழிப்படங்களும் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய் படமோ, அஜித் படமோ சினிமாவுக்கு செலவு செய்யவில்லை. தங்களுக்கு செலவு செய்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்கள் சம்பளமாக வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும்? கண்டிப்பாக எடுக்க முடியாது.
அதனால் இந்த மேடையை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு இந்த விஷயத்தை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போது, 10 சதவீதம் தான் சம்பளத்திற்கு வரும். 90 சதவீதம் படத்திற்கு போகும். அதனால் அன்று நமது மொழி படங்களின் கதை, மேக்கிங் பேசியது. ஆனால் இன்று அப்படி இல்லை. இதனாலேயே தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பேசியுள்ளார் .