'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கோலமாவு கோகிலா, டாக்டர் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். மூன்றாவதாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முந்தைய படங்களை விட இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருகின்றன. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் படம் ஏமாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அளித்த ஒரு பேட்டியில், பீஸ்ட் படத்தின் கதைக்களத்தில் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த கேரக்டர் அப்படி உருவாக்கப்பட்டது தான். அதற்கு விஜய் சம்மதிக்கனும், அதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு பதில் வெளியானதை அடுத்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகத்தை நீங்கள் எடுப்பீர்கள். ஆனால் விஜய் அதில் நடிப்பாரா? என ரசிகர்கள் பதில் கேள்வி கேட்டு வருகின்றனர்.