ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். சில வருடங்களுக்கு முன் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படத்திலேயே மிரட்டலான வில்லத்தனத்தால் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தநிலையில் தமிழில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் ஒன் 2 ஒன் என்கிற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார் அனுராக் காஷ்யப். கதாநாயகியாக ராகினி திவேதி நடிக்கும் இந்த படத்தை திருஞானம் இயக்குகிறார். இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையாக பவர்புல் வில்லன் வேடம் இருந்ததால் பலபேரை பரிசீலனையில் வைத்திருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கூட யோசனை செய்யப்பட்டதாம். இறுதியில் அனுராக் காஷ்யப் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த தகவலை அனுராக், சுந்தர்.சி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.