பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, தங்கராசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இவர்களில் தங்கராசு என்பவர் அப்பட நாயகன் கதிரின் தந்தையாக நடித்தார். நாட்டுப்புற கலைஞராக இவர் நடித்து இருந்த வேடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அதோடு கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தங்கராசுவின் வறுமையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. அந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.