பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சென்னை : விஜய் நடித்த ‛பீஸ்ட்' படம் இன்று(ஏப்., 13) வெளியாகி உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ஹிந்தி மொழி தொடர்பான வசனம் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை ஓட வைப்பதற்காக ஒவ்வொரு படத்திலும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை வலிய திணிப்பதை விஜய் வழக்கமாக வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என தொடர் கதையாகிவிட்டது. ஆனால் அதுவே படத்திற்கு பெரும் பப்ளிசிட்டி ஆகி விடுவதால் வேண்டுமென்றே சில சர்ச்சையான விசயங்களை திணிக்கிறார்களோ என எண்ண தோன்றுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று(ஏப்.,13) திரைக்கு வந்துள்ள படம் ‛பீஸ்ட்'. இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தில் பயங்கரவாதிகளை முஸ்லீம்களாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. காஷ்மீரில் உள்ள பயங்கரவாதியிடம் பேசும் விஜய், ‛‛உனக்கு ஒவ்வொரு முறையும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா'' என பேசுகிறார். ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்தி தொடர்பான சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இவர் ஹிந்தியை எதிர்ப்பது போன்ற வசனத்தை வலிய திணித்து இருப்பதாக தெரிகிறது. இந்த வசனம் டிரெண்ட் ஆகும் அதேசமயம் தேவையின்றி சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
![]() |