'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வாத்தி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார் தனுஷ். தெலுங்கு தமிழில் தயாராகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கிறார்கள். இந்த படம் கல்வி மாபியாக்களின் கதை என்றும், இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
படத்திற்கு ஜீ.பி.பிரகாஷ் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.




