சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் |
பேட்ட படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் குறுகிய காலத்திலேயே முன்னணி வரிசை கதாநாயகியாக மாறினார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைக்கவும் தவறுவது இல்லை. ஆனால் தற்போது கன்னத்தில் முகப்பருவுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் மாளவிகா
அவர் கூறுகையில், “நடிகைகள் என்றால் எப்பொழுதுமே பளபளப்பான தோலுடன் தான் இருப்பார்கள் என பலரும் நினைப்பார்கள். ஆனால் நேற்று எனக்கு முக்கியமான படப்பிடிப்பு இருந்த நிலையிலும் கூட கடந்த இரண்டு நாட்களாக கன்னத்தில் தோன்றிய இந்த முகப்பரு என்னை பழி தீர்த்து வருகிறது. எவ்வளவு அழகான சருமம் என நாங்கள் நடிக்கும் விளம்பரத்தை பார்த்து ஆச்சரியப்படும் மக்களுக்கு, எங்களுக்கும் இதுபோன்ற உடல்நல குறைபாடுகள் வரும் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இருந்தாலும் இதுபோன்ற முகப்பருக்களோ அல்லது வேறு எதுவோ வந்தாலும் கூட அவற்றை விரைவில் திரும்பி சென்று விடும் ஒரு அழையா விருந்தாளியாக நினைத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்” என்றார்.