Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடமையைச் செய்த எஸ்ஜே.சூர்யா; பலன் தரப்போகும் சிம்பு

10 ஏப், 2022 - 04:18 IST
எழுத்தின் அளவு:
SJ-Suryah's-Kadamaiyai-Sei

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனாக நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 வெளியாக இருக்கிறது. அதேசமயம் அவர் ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் என்கிற படமும் இதே மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார். இவர் சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் என்கிற படத்தை இயக்கியவர்.

இந்த கடமையை செய் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் கிடைத்த வெற்றியும் அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பும் தான் எஸ்.ஜே.சூர்யா படத்தை சிம்புவின் நிறுவனம் வெளியிடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛சட்டம் என் கையில்' படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ்‛சட்டம் என் கையில்' படத்தில் ... வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி வருத்தத்தில் இருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)