நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்கள் தற்போது தெலுங்கு திரையுலகிலும் நேரடி படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். அப்போது அந்த பட்டியலில் இணைந்துள்ள நடிகர் விஷ்ணு விஷாலும் தெலுங்கில் கட்டா குஸ்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை தெலுங்கு முன்னணி நடிகர் ரவிதேஜா தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் படத்தை தெலுங்கில் வெளியிட்டவர் ரவி தேஜா தான்.
செல்லா அய்யாவு என்பவர் இயக்கும் இந்த கட்டா குஸ்தி படம் மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள நாயகி ஐஸ்வர்ய லட்சுமி தென்காசி பகுதி தன்னுடைய மனதை கவர்ந்து விட்டதாகவும், தான் ஏதோ இந்த பகுதியை சேர்ந்தவர் போன்ற உணர்வு தனக்குள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.