12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு பல இடங்களில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் பற்றிய தகவல்கள், கதைச் சுருக்கம் ஆகியவற்றை அவர்களது இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த விதத்தில் 'பீஸ்ட்' படத்தின் கதைச்சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே 'பீஸ்ட்' டிரைலரைப் பார்த்தே அதன் கதை என்ன என்று சொல்லிவிடலாம். அது மட்டுமல்ல சில பல ஹாலிவுட் படங்களின் காப்பி, யோகி பாபு நடித்த 'கூர்க்கா' படத்தின் காப்பி என்றெல்லாம் படத்தின் கதை பற்றி கிண்டலடித்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள கதைச்சுருக்கம் கீழே…
“மாநகரத்தின் பிஸியான இடம் ஒன்று சர்வதேச தீவிரவாத குழு ஒன்றால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அவர்களது குழு தலைவனை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமிக்கிறது. அவர்கள் தீவிரவாதக் குழுவுடன் பேச ஆரம்பிக்கிறார்கள். ஹைஜாக் செய்யப்பட்ட அந்த கட்டிடத்திற்குள் தன்னுடன் பணி புரிந்த முன்னாள் ரா ஏஜன்ட் இருப்பதை அரசு நியமித்த குழுவின் தலைவர் கண்டுபிடிக்கிறார். அவரிடம் தீவிரவாதக் குழுவிடமிருந்து பணயக் கைதிகளை விடுவிக்க உதவி கேட்கிறார். தீவிரவாத குழுவை எதிர்த்துப் போராடி பணயக் கைதிகளை மீட்கும் பணியை ஆரம்பிக்கிறார் அந்த முன்னாள் ரா ஏஜன்ட். தீவிரவாதக் குழுவின் தலைவனை அரசாங்கம் விடுவிக்கிறது, அது மட்டுமல்ல தீவிரவாதக் குழுவுக்கு ஆதரவாகவே எல்லாம் நடக்கிறது. ஆனால், ரா ஏஜன்ட் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி தீவிரவாதியையும் கொல்கிறார்”.
'பீஸ்ட்' கதைச்சுருக்கம் 'பெஸ்ட்' ஆ, இல்லை 'வேஸ்ட்' ஆ என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.