ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
எப்ஐஆர் படத்தை அடுத்து மோகன்தாஸ் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதையடுத்து ‛கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடிக்கிறார். செல்லா அய்யாவு என்பவர் இயக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரிக்கிறார்கள். மல்யுத்தம் தொடர்பான கதையில் உருவாகிறது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலும், ரவி தேஜாவும் இணைந்து இருந்த படங்கள், அவர்கள் குழுவாக விவாதித்த படங்கள் வைரல் ஆனதால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது தயாரிப்பாளராக மட்டும் ரவி தேஜா இணைந்துள்ளார். அதேசமயம் சிறப்பு தோற்றத்தில் இவர் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு (கபடி), ஜீவா (கிரிக்கெட்) படங்கள் விளையாட்டை மையமாக வைத்து உருவாகின. அந்த படங்கள் விஷ்ணு விஷாலுக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இந்த படமும் விளையாட்டு தொடர்பான கதையில் உருவாகிறது.