எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு |
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இன்னொரு போட்டியாளரான கவினுடன் லாஸ்லியாவுக்கு காதல் ஏற்பட்டது. அதன்காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்கள் காதலர்களாக சுற்றி வருவதாக அவ்வப்போது செய்திகள் வைரலாகின.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த லாஸ்லியா, தற்போது கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்துள்ளார். தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது லாஸ்லியா அளித்துள்ள ஒரு பேட்டியில் , பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கவினுக்கும் எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகத்துக்கு வந்து நாங்கள் பழகியபோது எங்களுக்கிடையே செட்டாகவில்லை. அதனால் இப்போது இருவருமே அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். அந்தவகையில் எங்கள் இடையிலான காதல் பிரேக் அப் ஆகி நாங்கள் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் லாஸ்லியா.