டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பலரது எதிர்பார்ப்பும் பணப்பெட்டி டாஸ்க் மீது தான் இருக்கிறது. ஆனால், இம்முறை பணப்பெட்டி டாஸ்க்கில் புது டுவிஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது முன்பெல்லாம் பணப்பெட்டியை எடுத்துவிட்டு போட்டியாளர் அதோடு வெளியேறி விடுவார். இம்முறை பணப்பெட்டி எடுப்பவர் குறிப்பிட்ட தூரத்திற்குள் பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டால் பணத்துடனும், போட்டியையும் தொடரலாம்.
இது ஒருபுறமிருக்க முன்னாள் போட்டியாளரான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், போட்டியாளராக இல்லை. அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங் படத்தின் புரொமோஷனுக்காக அந்த படத்தின் ஹீரோ ஹரி பாஸ்கருடன் சென்றுள்ளார். அங்கே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்ட லாஸ்லியாவிடம் பிக்பாஸும் நீங்கள் ரொம்பவே வளர்ந்துவிட்டீர்கள் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.