'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்டே, செல்வராகவன், யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் செல்வராகவன்தான் வில்லனாக நடிப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில் படத்தின் டிரைலரில் செல்வராகவன் தீவிரவாதிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு அதிகாரியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்திருப்பது யார்? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. அதோடு டிரைலரில் காண்பிக்கப்பட்ட வில்லன் முகமூடி அணிந்து இருந்ததால் அது யார் என்பதை ரசிகர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோதான் முகமூடி அணிந்து நடித்திருக்கும் வில்லன் நடிகர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
என்றாலும் பீஸ்ட் படக்குழுவை பொறுத்தவரை அந்த வில்லன் விவகாரத்தை படம் திரைக்கு வரும்வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் படம் திரைக்கு வரும்போது தான் அந்த முகமூடி அணிந்த வில்லன் சைன் டாம் சாக்கோவா? இல்லை வேறு நடிகரா? என்பது தெரிய வரும்.