சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான பத்து நாட்களுக்குள் பல சாதனைகளைப் படைத்துள்ளது.
தெலுங்கில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலையும், உலக அளவில் 800 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இதுவரையிலும் அதிக வசூலைப் பெற்ற படமாக 'பாகுபலி 2' படமாக 204 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த வசூலை 'ஆர்ஆர்ஆர்' கடந்து 210 கோடியைப் பெற்றுள்ளதாம். இவை 'ஷேர்' தொகை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த வசூல் 275 கோடியைத் தாண்டியுள்ளதாம்.
கர்நாடகாவில் ஏற்கெனவே 50 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தமிழகத்தில் விரைவில் 50 கோடி வசூலைக் கடந்துவிடுமாம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் தான் குறைவாக 15 கோடியை வசூலித்துள்ளது. ஹிந்தியில் 165 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். வெளிநாடு வசூலும் 150 கோடியைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி 2' வசூலை மற்ற இடங்களில் இப்படம் முறியடிக்கிறதோ இல்லையோ, தெலுங்கில் முறியடித்துள்ளது குறித்து படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.