மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி(90). தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2020ல் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தார். திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 28) நடந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார்.