ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.. சமீபகாலமாக கருத்து கூறுவதை குறைத்துக் கொண்டு மீண்டும் படம் இயக்குவதில் பிசியாக இறங்கியுள்ளார். பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த ராம்கோபால் வர்மா அடுத்ததாக கன்னடத்தில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆர் என ஒற்றை எழுத்தில் டைட்டிலும் வைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற இவர், இந்தப்படத்தையும் அதே ஜானரில் தான் இயக்குகிறார். உபேந்திராவின் கதாபாத்திரம் பற்றி கூறும்போது, “யாருக்கும் பயப்படாத இந்த ஆர் பெங்களூரில் பிறந்து மும்பை சென்று அன்டர்வோர்ல்ட் தாதாவாக மாறியவன்.. தாவூத் இப்ராஹீம் கூட தானாகவே ஆர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். அதுமட்டுமல்ல, துபாயில் உள்ள டி கம்பெனிக்கு பல உதவிகளை செய்தவன் தான் இந்த ஆர்' என குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.