ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தமிழ் சினிமாவில் 2000-ன் துவக்கத்தில் உள்ளே நுழைந்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை லைலா. கன்னக்குழி அழகி என ரசிகர்களால் பாராட்டு பெற்ற லைலா தனது க்யூட்டான எக்ஸ்பிரஸன்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பாலும் ஆச்சரியப்பட வைத்தார். கடந்த 2006-ல் அஜித்துடன் பரமசிவன் படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், அஜித் நடித்த திருப்பதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியதுடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.
இந்தநிலையில் 16 வருடங்கள் கழித்து அவர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் என்றே தெரிகிறது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் இந்த தகவலை சூசகமாக அவர் உணர்த்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் மற்றும் முக்கிய வேடத்தில் சிம்ரன் ஆகியோர் நடித்து வரும் நிலையில் லைலாவும் இதில் நடிப்பது ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முன்னதாக பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரனும், லைலாவும் இணைந்து நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,.