‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதையடுத்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் அஜித் நடிக்கும் 63 வது படத்தை சிவா இயக்கவுள்ளாராம். இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு அஜித்துடன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .