இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் பட வெற்றிக்கு பிறகும் கூட ஏழு வருடங்கள் கழித்தே தனது அடுத்த படமான கோல்டு படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ஒரே நாளில் ஏழு மில்லியன் பார்வைகளை தொட்டுள்ளது. மலையாள திரையுலகில் இது புதிய சாதனை தான்.
இந்த டீசரில் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து வாழைத்தார்களை திருடும் மூன்று பேரை எச்சரித்தபடியே சுமார் முப்பது வினாடிகள் நடந்து வரும் பிரித்விராஜ், ஒருவரை ஓங்கி உதைக்கிறார். அடுத்ததாக பாப்கார்ன் சாப்பிடும் நயன்தாரா ஒரு பாப்கார்னை வாயில் போட்டபடி, நமட்டு சிரிப்பு சிரித்து லேசாக கண்ணடிக்கிறார்.. இரண்டு நிமிடம் ஓட கூடியதாக உருவாகியுள்ள டீஸரில் இவ்வளவு தான் மொத்த காட்சியே.. ஆனாலும் வழக்கமான டீசர்களில் இருந்து இது வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.