டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை(மார்ச் 25) வெளியாகிறது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் அந்த மாநில மொழிகளில் தான் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. ஆனால், கன்னட மொழி பேசும் கர்நாடகாவில் மிகக் குறைவான தியேட்டர்களில் தான் 'கன்னட ஆர்ஆர்ஆர்' வெளியாகிறது. அதே சமயம் தெலுங்கு, ஹிந்தி 'ஆர்ஆர்ஆர்' ஆகியவை அதிக தியேட்டர்களில் வெளியாகிறது.
மேலும், நேற்று வரை கன்னட ஆர்ஆர்ஆர் படத்திற்கான முன்பதிவுகளும் ஆரம்பமாகாமல் இருந்தது. அதனால், நேற்று காலை முதலே கன்னட சினிமா ரசிகர்கள் #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வந்தனர். அதன்பிறகு சில தியேட்டர்களில் 'கன்னட ஆர்ஆர்ஆர்' படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின. இருந்தாலும் தற்போது வரை தங்களது எதிர்ப்புகள் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள் கன்னட ரசிகர்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான முன்பதிவுகள் தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற மொழிகளில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. நாளை படம் வெளிவந்த பின்பு படம் பற்றிய ரிப்போர்ட் பாசிட்டிவ்வாக வந்தால் பரபரப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.