மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
வினோத் இயக்கத்தில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளிவந்தது. இன்றுடன் படம் வந்து ஒரு மாதமாகிவிட்டது. நாளை இப்படத்தை ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.
அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரும் வெளியிட்டிருந்தார். அதில், “200 பிளஸ் கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனை புரிந்த தென்னிந்திய ஆக்ஷன் அனுபவமான 'வலிமை' படத்தை ஹிந்தியிலும் கொண்டு வருகிறது ஜீ 5. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 25ம் தேதி இப்படத்தின் பிரிமீயர், 2022ம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஆக்ஷன் படம்” என அவர் பதிவிட்டுள்ளார்.
'வலிமை' படத்தின் வசூல் பற்றி படம் வெளிவந்ததிலிருந்தே பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. சமூகவலைதளங்களில் தங்களை பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் பலர் இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல் என அள்ளிவிட்டார்கள். சிலரோ படம் நஷ்டம் தரும் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் போனி கபூர் 200 கோடி பிளஸ் வசூல் என குறிப்பிட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இனி, வலிமை வசூல் பற்றி யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.