6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
மாதவன் முதன் முறையாக தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் ராக்கெட்டரி : தி நம்பி எபெக்ட். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டு சட்டபோராடத்திற்கு பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
இந்த படத்தில் நம்பி நாராயணன் பாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தயாரான இப்படம் உலகமெங்கும் வருகிற ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோசன் பணிகளை மாதவன் தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2022ல் இதன் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நம்பி நாராயணன் பேசியதாவது: எனது வரலாற்றை படமாக்க பலர் முன் வந்தார்கள். ஆனால் பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. மாதவன்தான் என் கதையை படமாக்க தகுதியான நபர் எனக்கு தோன்றியதால் சம்மதித்தேன்.
ஒரு ராக்கெட் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் கருத்து. ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்கு இந்த படம் தெரிவிக்கும். என்றார்.