தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து துணை நடிகர்களான ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 'தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும். தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்,' என கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துணை நடிகர் ஏழுமலை உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.-அப்போது நீதிபதி எம்.என்.சுந்தரேஷ் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது அதிலிருந்து நான் விலகி விட்டேன். இப்போதும் விலகிக் கொள்கிறேன் இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. என்று கூறினார். இதனால் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.