அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சமூக வலைத்தளங்கள் மூலமாக சினிமா பிரபலங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுண்டு. அவர்களது வலைத்தள பக்கங்களில் எவ்வளவு பாலோயர்கள் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்றபடியான விளம்பரக் கட்டணங்களை சில நிறுவனங்கள் தருகின்றன.
மது வகைகளை பிரபல நடிகைகளின் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது சமீப காலமாக அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு முன்பு நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, ஹன்சிகா, லட்சுமி ராய் உள்ளிட்ட நடிகைகள் மது விளம்பரங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்கள்.
இப்போது நடிகை சமந்தாவும் மது விளம்பர வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிகரெட், மது உள்ளிட்டவைகளை டிவியில் விளம்பரப்படுத்த முடியாது. சினிமாக்களில் அப்படியான காட்சிகள் வந்தால் கூட எச்சரிக்கை வாசங்களை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இப்படி 'சரக்கு' விளம்பரங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.