'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகானார். விஜய், அஜித், சூர்யா என டாப் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தமிழில் அவர் டாப் நடிகையாக இடம் பெற முடியவில்லை. தமிழில் நடிப்பதைவிடவும் ஹிந்தியில் நடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டியதே அதற்குக் காரணம்.
இருந்தாலும் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான்--இந்தியா படமான 'சலார்' படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி இயக்குனரான கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
இதற்கடுத்து சிரஞ்சீவி ஜோடியாக மற்றுமொரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இது பற்றி தகவலை சிரஞ்சீவியும் வெளியிட்டிருந்தார்.
அடுத்தடுத்து மூன்று பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி இருந்தாலும் 'சலார்' படம் தவிர மற்ற இரண்டு படங்களிலும் 60 வயதிற்கு அதிகமான நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருடன் நடிக்க சம்மதித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.