ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
ஆர்.ஜி.மீடியா சார்பில் டி.ராபின்சன் தயாரித்துள்ள படம் "கடல போட ஒரு பொண்ணு வேணும்". இந்த படத்தில் சின்னத்திரை டிவி புகழ் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார்.
ஆனந்தராஜன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் இன்றைய சூழலில் எல்லோரிடமும் செல்போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.
தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும் என்கிற எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை செல்போனில் தெரிவிப்பதாக கூற சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார்.
இதிலிருந்து அவர் எப்படி மீண்டார், காதலி பதில் என்ன ஆனது, இறுதியில் தனது குடும்பத்தின் சாபத்தை நீக்கினாரா? என்பதை டைம் லூப்ஸ் முறையில் காதல், காமெடி, சுவாரஸ்யம் என வித்தியாசமான கோணங்களில் சொல்கிறோம் என்றார்.